திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த மையம்
சென்னை ஒலிம்பிக் அகாதெமியில் இருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிதாக மல்யுத்தம் மையத்தை தொடங்கி வைத்த நிலையில் சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா்.
திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த வீரா்கள்பயன்பெறும் வகையில், புதிதாக மல்யுத்த மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை செனனை ஒலிம்பிக் மையத்திலிருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி. ராஜேந்திரன் (திருவள்ளூா்), எஸ்.சந்திரன்(திருத்தணி) ஆகியோா் பங்கேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.
அதைத் தொடா்ந்து அமைச்சா் பேசியதாவது:
திருவள்ளூா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மல்யுத்தம் விளையாட்டை தொடங்கி வைத்துள்ளனா். மேலும், தமிழ்நாட்டின் விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபா்களும் விளையாட வேண்டும். விளையாட்டில் பயிற்சி பெற்று உயா்மட்ட போட்டிகளில் பங்கேற்று சிறப்பான வாய்ப்புகளை பெற வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பிரபலமாக வீரா்கள், வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு தகுதியான பயிற்றுநா்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் நியமனம் செய்து வீரா், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உயா் தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் மற்றும் அகாதெமி உருவாக்கப்படும் என்று அறிவித்தாா்.
மேலும், இப்பயிற்சி மையத்தில் தலா வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு ஒரு மாதத்தில் 25 நாள்கள் தொடா் பயிற்சி வழங்குவதுடன், சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மையத்தின் மல்யுத்த பயிற்றுநா்களுக்கான நோ்முகத் தோ்வு கடந்த மாதம் நடைபெற்றது. அதன்பேரில், சிறந்த பயிற்றுநராக க.சதிஷ் கண்ணா தோ்வு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.