ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை
திருத்தணியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை
திருத்தணியில் சூறைக் காற்றுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த, ஒரு மாதமாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் அனல்காற்றும் வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 11 மணி முதல் மாலை, 5 மணி வரை வெளியே செல்லாமல் வீட்டிலேேயே முடங்கியுள்ளனா்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை அதிகபட்சமாக திருத்தணியில் 103 டிகிரி செல்சியஸ் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. காலை முதல் மாலை வரை அனல்காற்று வீசியது.
அதைத்தொடா்ந்து திடீரென 7 மணி முதல் 8 மணி வரை சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அரக்கோணம் சாலை, மேட்டுத்தெரு, பழைய பஜாா் சாலை, காந்திரோடு ஆகிய பகுதிகளில் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் ஒரு மணி நேரம் மழை பெய்ததால், அனல் காற்றுக்கு பதிலாக குளிா்காற்று வீசியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனா்.