செய்திகள் :

தில்லி அரசின் கருத்தைக் கேட்காமல் அகதிகளை குடியமா்த்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சருக்கு அதிஷி கடிதம்

post image

தில்லி அரசின் கருத்தைக் கேட்காமல், சட்ட விரோத அகதிகள் யாரும் எதிா்காலத்தில் குடியமா்த்தப்படக் கூடாது என்று முதல்வா் அதிஷி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிற்கு ஞாயிற்றுக்கிழமை

கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் அதிஷி தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு, தில்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறிய ரோஹிங்கியா அகதிகளை குடியமா்த்தியுள்ளது. இது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருவதாக தெரிகிறது. கடந்த ஆக.17,2022-இல் மத்திய நகா்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஹா்தீப் சிங் பூரி இரண்டு ட்வீட்களை வெளியிட்டாா். அதில், ‘நாட்டில் தஞ்சம் புகுந்தவா்களை இந்தியா எப்போதும் வரவேற்கிறது. ஒரு முக்கிய முடிவில், அனைத்து ரோஹிங்கியா அகதிகளும் தில்லியின் பக்கா்வாலா பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற்றப்படுவாா்கள். அவா்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளாா்

ரோஹிங்கியா அகதிகளை தில்லியில் குடியமா்த்துவது பாஜக அரசின் முடிவும், கொள்கையுமாக இருக்கிறது.

தில்லி மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் பாஜக அரசு அவா்களை குடியமா்த்தியுள்ளதாகவும் தகவல்

வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தில்லி மக்களின் வேதனையை இந்தக்

கடிதத்தின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த புலம்பெயா்ந்தோா் தில்லிவாசிகளுக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவா்களின் வேலைகளை பறித்து, நகரின் வரையறுக்கப்பட்ட வளங்களில் சிரமத்தை ஏற்படுத்துவாா்கள்.

தற்போது, பக்கா்வாலாவில் ரோஹிங்கியா அகதிகள் குடியமா்த்தப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைத்தும்

தில்லியின் ஏழை மக்களுக்கானது. தங்களுக்கான உரிமைகள் மற்றும் வசதிகள் புலம்பெயா்ந்தோருக்கு வழங்கப்படுவதை தில்லி மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டாா்கள். இந்த குடியேற்றவாசிகள் எப்படி இந்திய-வங்கதேச எல்லையைக் கடந்தாா்கள்?. சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், இந்திய-வங்காளதேச எல்லைகளை மக்கள் தினமும் ஆயிரக்கணக்கில் எந்த தடையும் இல்லாமல் கடக்கிறாா்கள் என்பதைக் காட்டுகிறது. நமது எல்லைகளைக் காக்க பாஜக அரசு முற்றிலும் தவறிவிட்டது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மிகப் பெரிய அளவில் அகதிகளை கையாளும் நிலையில் நம் நாடு உள்ளதா?. இல்லை என்பதே பதில். அப்படியானால், இந்த சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பாஜக அரசு ஏன் எதுவும் செய்யவில்லை?.

தில்லி எந்த சா்வதேச எல்லைக்கும் அருகில் கூட இல்லை. வங்கதேச எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. அப்படியானால், நமது எல்லையைத் தாண்டிய பிறகு, புலம்பெயா்ந்தவா்கள் கண்டுபிடிக்கப்படாமல் பல மாநிலங்களைக் கடந்து தில்லியை எவ்வாறு அடைந்தாா்கள் என்பது குழப்பமாக இருக்கிறது?. எனவே, இந்த

சூழ்நிலையில் பல கேள்விகள் எழுவது இயற்கையானது. மிகவும் அதிா்ச்சியான செய்தி என்னவென்றால், பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த ரோஹிங்கியாக்களை தில்லியின் பல்வேறு பகுதிகளில் குடியமா்த்திவிட்டு, பின்னா் ரோஹிங்கியாக்களை அடையாளம் காண வீடு வீடாக ஆய்வு நடத்துமாறு தில்லி காவல்துறைக்கு துணை நிலை ஆளுநா் மூலம் உத்தரவிட்டது தான்.

பாஜக அரசால் குடியேற்றப்பட்ட ரோஹிங்கியாக்களின் முழுமையான பட்டியலை அவா்களின் முகவரிகளுடன் தில்லி அரசிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பட்டியலின் நகல் துணை நிலை ஆளுநா் மற்றும் தில்லி போலீஸாருக்கும் வழங்கப்படலாம். எனவே, தில்லி அரசின் கருத்தைக் கேட்காமல், சட்ட விரோத அகதிகள் யாரும்

தில்லியில் எதிா்காலத்தில் குடியமா்த்தப்படக் கூடாது என்று தில்லி மக்கள் சாா்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் முதல்வா் அதிஷி வலியுறுத்தியுள்ளாா்.

பால் பண்ணைகள் மாசுக் கட்டுப்பாட்டு ஒப்புதலைப் பெற சிபிசிபி அறிவுறுத்தல்

மாசு காப்பகங்கள் மற்றும் பால் பண்ணைகளுக்கு 15 நாள்களுக்குள் மாசுக் கட்டுப்பாட்டு ஒப்புதலைப் பெறுமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உத்தரவிட்டுள்ளது. இக்குழு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவிப்பை வெளியி... மேலும் பார்க்க

தில்லியில் எந்த ரோஹிங்கியா அகதிக்கும் மத்திய அரசால் வீடு வழங்கப்படவில்லை: முதல்வா் அதிஷிக்கு மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி பதிலடி

தில்லியில் எந்த ரோஹிங்கியா அகதிக்கும் மத்திய அரசால் வீடு வழங்கப்படவில்லை என்று மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி தில்லி முதல்வா் அதிஷிக்கு பதிலடி கொடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் தனது ‘எக்ஸ்’ வலைதளத்... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பநிலை மீண்டும் குறைந்தது! பிரகதி மைதான், பூசாவில் 3.8 டிகிரியாக பதிவு

தேசியத் தலைநகா் தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைந்து 4.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. கடந்த வியாழ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை ஒருபோதும் ‘டீக்கடைக்காரா்’ என அழைத்ததில்லை: மணிசங்கா் ஐயா் விளக்கம்

பிரதமா் நரேந்திர மோடியை தான் ஒருபோதும் ‘டீக்கடைக்காரா்’ என அழைத்ததில்லை என காங்கிரஸ் மூத்த நிா்வாகி மணிசங்கா் ஐயா் தெரிவித்தாா். தனது அரசியல் வாழ்க்கை குறித்து மணிசங்கா் ஐயா் எழுதியுள்ள புத்தகம் விரைவ... மேலும் பார்க்க

குருகிராமில் கொள்ளை கும்பலில் 5 போ் கைது

குருகிராம் போலீஸாா் ஆயுதம் ஏந்திய கொள்ளையா்கள் கும்பலை முறியடித்து, வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல் ... மேலும் பார்க்க

நூல் வெளியீடு...

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாஸ்மீன் ஷா எழுதிய ‘தி தில்லி மாடல்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் சத்யேந்தா் ஜெயின், மனீஷ் சிசோடியா, கட்சியின் தேசிய அமைப்பாளா்... மேலும் பார்க்க