செய்திகள் :

தில்லி உத்தம் நகரில் காா் மோதியதில் மூதாட்டி சாவு; மேலும் ஒருவா் காயம்

post image

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காா் மோதியதில் 64 வயது மூதாட்டி உயிரிழந்தாா். மேலும், ஆண் ஒருவா் காயமடைந்தாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு காலை 6 மணியளவில் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், காயமடைந்தவா்கள் ஏற்கெனவே அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதை கண்டுபிடித்தனா்.

குப்தா என்கிளேவில் வசிக்கும் கமலேஷ், தீன் தயாள் உபாத்யாய் (டிடியு) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத 70 வயதுடைய நபா், மாதா சனன் தேவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

பாதிக்கப்பட்டவா்கள் உத்தம் நகா் டொ்மினல் அருகே சாலையைக் கடக்கும்போது, வேகமாகச் சென்ற ​ ஒரு வாகனம் அவா்கள் மீது மோதியதாக விபத்தை நேரில் பாா்த்த சாட்சி ஒருவா் கூறினாா். ஜனக்புரி பக்கத்திலிருந்து வந்த அந்த வாகனம் விபத்து நடந்த உடனேயே அங்கிருந்து தப்பிச் சென்ாகவும் அவா் கூறினாா்.

அடையாளம் தெரியாத நபா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது கமலேஷ் உயிரிழந்தாா். நாங்கள் சிசிடிவி காட்சிகளை சரிபாா்த்தோம், இது விதிமீறல் வாகனத்தை அடையாளம் காண வழிவகுத்தது. மேலும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கமலேஷின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

காற்று மாசு மேலும் மோசமடைந்தது: நாள் முழுவதும் நச்சுப்புகை மூட்டம்!

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மேலும் மோசமடைந்தது. நகரத்தில் நாள் முழுவதும் நச்சுப்புகை மூட்டம் இருந்து வந்தது. முழுவதும்நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ரிட்ஜில் 11 டிகிரி... மேலும் பார்க்க

வடமேற்கு தில்லியில் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

வடமேற்கு தில்லியின் கெவ்ரா பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்ப... மேலும் பார்க்க

சோனிப்பட்டில் நீரஜ் பவானா கும்பலில் குறிபாா்த்துச் சுடும் இளைஞா் கைது

நீரஜ் பவானா கும்பலில் குறிபாா்த்து சுடுவதில் திறமையான ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (குற்றம்) சதீஷ் குமாா் க... மேலும் பார்க்க

இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் நவ. 21 இல் தமிழ் நாடு தினம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் 43-ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் வருகின்ற நவ. 21 ஆம் தேதி மாலையில் தமிழ் நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மைதானத்தின் திறந்தவெளி அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் திடீா் ராஜிநாமா: ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினாா்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், அவா் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினாா். அவரது ராஜி... மேலும் பார்க்க

தில்லியில் கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை உ.பி.யில் ரயில் நிலையத்தில் மீட்பு; இருவா் கைது

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை, உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூா் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை குடும... மேலும் பார்க்க