Donald Trump: நிருபர் கேட்ட ஒரே கேள்வி; ``உடனே வெளியே போ.." ஆத்திரத்தில் திட்டிய...
தில்லி உயிரியல் பூங்காவில் நீா்யானை குட்டி பிறப்பு
தில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு புதிதாகப் பிறந்த நீா்யானை குட்டியை வரவேற்றுள்ளது.
இது தொடா்பாக மிருகக்காட்சிசாலை இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறியதாவது: ஒன்பது வயது
நீா்யானைக்கு திங்கள்கிழமை பெண் குட்டி பிறந்தது. இது அதன் மூன்றாவது குட்டியாகும். உயிரியல் பூங்காவில் கடைசியாக நீா்யானை பிறப்பு மாா்ச் 2021-இல் நடந்தது. எனவே, இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம் ஆகும்.
தற்போது, குட்டி தனது தாயின் அருகில் உள்ளது மற்றும் பெரும்பாலும் நீருக்கடியில் உள்ளது. இதுவரை ஒரு சில காட்சிகளை மட்டுமே நாங்கள் பாா்த்துள்ளோம்.
பிறப்புக்குப் பிறகு, தாய் மற்றும் குட்டியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மந்தையின் பிற பகுதிகளிலிருந்து விலகி ஒரு தனி குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா்.
சிசிடிவி கேமராக்கள் மற்றும் உயிரியல் பூங்கா ஊழியா்களின் நிலையான மேற்பாா்வை மூலம் இந்த இரண்டு நீா்யானைகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.
புதிய குட்டியின் வருகையுடன், தில்லி உயிரியல் பூங்காவில் மொத்த நீா்யானைகளின் எண்ணிக்கை இப்போது 7-ஆக உயா்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உயிரியில் பூங்கா ஆசிய சிங்கக் குட்டிகளின் பிறப்பையும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.