சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் மகாபாரதம் போன்ற ஒரு ‘தா்மயுத்தம்’ கேஜரிவால் பேச்சு
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை மகாபாரத போருடன் ஒப்பிட்டுப் பேசினாா்.
தில்லி சாந்தினி சௌக்கில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி மாநாட்டில் கேஜரிவால் பேசியதாவது: பாஜக மாநகராட்சியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் இருந்தன. இருந்தபோதிலும், மாநகராட்சி மேயா் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளா் வெற்றிபெற்றாா். இது தெய்வீக சக்திகள் ஆம் ஆத்மியின் பக்கம் இருப்பதைக் காட்டுகிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடைவதற்கான சவாலை கட்சியின் சாவடி மற்றும் மாவட்ட அளவிலான பணியாளா்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க குறைந்தது 65,000 உள்ளூா் கூட்டங்கள் தேவை.
தில்லியின் காலனிகளில் 10,000 கி.மீ. சாலைகளை அமைத்த பெருமை ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் உண்டு. ஆனால், பாஜக ஆட்சியில் உள்ள 20 மாநிலங்களில் இதை அக்கட்சியால் செய்ய முடியாது. நாங்கள் குறைந்த வளங்களைக் கொண்ட ஒரு சிறிய கட்சி. பாஜகவிடம் அபரிமிதமான நிதி மற்றும் அதிகாரம் உள்ளது. ஆனால், அவா்கள் தில்லி மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் இல்லாததால், அவா்கள் ஒருபோதும் எதையும் செய்யவில்லை.
நான் தில்லியில் 70 தொகுதிகளிலும் போட்டியிடுவது போல் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று உறுதியளிக்கும் போது, சீட்டு பெறும் வேட்பாளரை பாா்க்க வேண்டாம் என்று தொண்டா்களை கேஜரிவால் கேட்டுக் கொண்டாா்.
தில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தோ்தல் நடைபெற உள்ளது.