தில்லியில் கடந்த 2 நாள்களில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் !
தில்லி-என்சிஆர் பகுதியில் கடந்த 2 நாள்களில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெள்ளிக்கிழமை மாலை தில்லி-என்சிஆரின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவானது. இரவு 7:49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
10 கி.மீ. ஆழத்திலும் ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியை மையமாகக் கொண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த இரண்டு நாள்களில் தில்லியின் என்சிஆர் பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
முன்னதாக வியாழக்கிழமை காலை ஜஜ்ஜார் அருகே 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.