செய்திகள் :

தில்லியில் துபை இளவரசர்!

post image

துபை நாட்டு முடி இளவரசர் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

துபையின் முடி இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று (ஏப்.8) இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று முடி இளவரசராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்தியா வந்த அவரை இன்று தில்லி விமான நிலையத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி அரசு மரியாதையுடன் வரவேற்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சருமாக பதவி வகிக்கும் இளவரசர் ஹம்தான் இந்த இரண்டு நாள் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து கலந்து ஆலோசிக்கவுள்ளார்.

இந்நிலையில், இளவரசர் ஹம்தானுடன் ஐக்கிய அரபு அமீரக அரசின் முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு தொழிலதிபர்கள் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் மதிய உணவு விருந்தில் அவர் இன்று (ஏப்.8) கலந்துக்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில் தில்லியிலிருந்து மும்பை செல்லும் இளவரசர் ஹம்தான் அங்கு இந்தியா மற்றும் துபையைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியின் முடி இளவரசர் காலித் பின் முஹம்மது பின் ஜயத் அல் நஹ்யான் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அதன் பின்னர் தற்போது இளவரசர் ஹம்தானின் பயணமானது இருநாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், துபை இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், இரண்டாவது மிகப் பெரிய ஏற்றுமதி தளமாகவும் பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 8 மாதங்கள் விண்வெளியில்... ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

நேபாளத்தில் 12 இந்தியர்கள் சென்ற தனியார் விமானம் அவசரமாக காத்மாண்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் உள்நாட்டில் பயணிக்க இயக்கப்படும் சீதா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவன... மேலும் பார்க்க

ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

ஹரியாணா மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹிஸார் மாவட்டத்திலுள்ள நாங்தலா கிராமத்திலுள்ள ஓரு பூங்காவில் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்பேத்... மேலும் பார்க்க

பாங்காக் சென்றதை மறைக்க கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது!

மகாராஷ்டிரத்தின் மும்பை விமான நிலையத்தில் தனது கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புணே மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் பாலேராவ் (வயது 51) என்ற நபர், கடந்த ஏப்.14 ஆம் தேதி மும்... மேலும் பார்க்க

இபிஎஸ் பெயருடன் வந்த மின்னஞ்சல் மூலம் கேரள அரசு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநில பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்.16) காலை வெடி... மேலும் பார்க்க

ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!

யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய இடங்களின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமன் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின்... மேலும் பார்க்க

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடை நீக்கம்?

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற... மேலும் பார்க்க