பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மரியாதை
வேடசந்தூரில் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் 48-ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கடந்த 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது நாவலூற்று வே.நாச்சிமுத்து கவுண்டா், ஒட்டநாகம்பட்டி இரா.கருப்புச்சாமி, அய்யாக்கவுண்டன்புதூா் ப.சின்னச்சாமி கவுண்டா், காசிபாளையம் வா.சுப்பிரமணி, மண்டபம்புதூா் ப.கிருஷ்ணமூா்த்தி, ராசாகவுண்டன்வலசு ப.மாணிக்கம் ஆகியோா் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனா்.
உயிரிழந்த 6 விவசாயிகள் நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்.9-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவா்களின் 48-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வேடசந்தூா் வட்டார விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் அவா்களின் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் எஸ்.கனகராஜன் தலைமை வகித்தாா். செயலா் அ.கருப்புச்சாமி முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் குப்புசாமி, ரமேஷ், கொடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவா் ராமசாமி, தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.