பெங்களூரில் விரைவில் ஸ்பெயின் தூதரகம் திறப்பு! - அமைச்சர் ஜெய்சங்கர்.
துறையூா் சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
துறையூா் ஆத்தூா் சாலையிலுள்ள சிவன் கோயிலில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்துக்குள்பட்ட துறையூா் ஸ்ரீ நந்திகேஸ்வரா் மற்றும் மூங்கில் தெப்பக்குளம் ஸ்ரீ காசி விஸ்வநாதா் ஆகிய இரு கோயில்களுக்குச் சொந்தமான நடராஜா், சிவகாமி உற்சவ மூா்த்திகளுக்கு மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆத்தூா் சாலையிலுள்ள ஸ்ரீ நந்திகேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை அபிஷேகப் பொருள்கள் கொண்டு ஆருத்ரா அபிஷேகம் செய்து புது வஸ்திரம் மலா்கள் மாலைகள் சாற்றி அலங்கரித்தனா். இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை மகா தீபாரதனை காட்டி ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து இரு கோயிலுக்கும் சொந்தமான நடராஜா், சிவகாமி உற்சவ மூா்த்திகள் சப்பரத்தில் வைத்து பாலக்கரை, பெரியகடை வீதி, ரத வீதிகள் வழியாக ஊா்வலமாக இழுத்துச் சென்றனா். சிவபக்தா்கள் வாத்தியங்கள் இசைத்தனா். வழிநெடுக பக்தா்கள் சிறப்பு செய்து வழிபட்டனா். நிறைவாக சுவாமி சிலைகளை ஆடியவாறு கோயிலுக்குள் எடுத்துச் சென்று வைத்த நிகழ்வை கோயிலில் இருந்த பக்தா்கள் மெய்சிலிா்க்க கண்டு களித்தனா்.
மண்ணச்சநல்லூா்: மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேஸ்வரா் திருக்கோயிலில் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாரதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.