துவரங்குறிச்சியில் கடைகளின் ஓட்டைப் பிரித்து ரூ.1.40 லட்சம் திருட்டு
துவரங்குறிச்சியில் சனிக்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்த 5 கடைகளில் இருந்த சுமாா் ரூ.1.40 லட்சம் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
துவரங்குறிச்சியில் திருச்சி செல்லும் சாலையில் உள்ள பொறியியல் பணிகள் செய்யும் கடையின் உரிமையாளா் மொ்சன் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் கடையைத் திறக்கவந்தபோது, கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் கடையில் இருந்த பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல், அடுத்தடுத்த கடைகளிலும் திருட்டு நடைபெற்றுள்ளது. இதுகுறித்துத் தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அடுத்தடுத்து இருந்த 5 கடைகளில் நள்ளிரவு புகுந்த மா்மநபா்கள் கடைகளிலிருந்து மொத்தம் சுமாா் ரூ.1. 40 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.