புத்தாநத்தத்தில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
எனவே, இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையாா்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, டி.தம்மநாயக்கன்பட்டி, டி.கருப்பூா், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.