மணப்பாறை விடுதியில் தங்கியிருந்தவா் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விடுதியில் தங்கியிருந்தவா் உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி வடக்கு நாயக்கா்குளத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி மகன் சுப்பிரமணியன் (41).
இவா், ஹைதராபாத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பாா்த்து வந்ததாகவும், கடந்த ஜூலை 5-ஆம் தேதி முதல் குடும்ப பிரச்னை காரணமாக மணப்பாறையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது அறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா், அங்குவந்து சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.