கஞ்சா, பாலியல் வழக்கு குற்றவாளிகள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாரத் பெட்ரோல் பங்க் அருகே கடந்த ஜூன் 20-ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்ததாக ராம்ஜி நகா் காந்தி நகரைச் சோ்ந்த குணா (29) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், புத்தனாம்பட்டி பொன்விழா நகரைச் சோ்ந்த சிவகுமாா் (39) என்பவரை போலீஸாா் கடந்த ஜூலை 3-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேற்கண்ட குற்றவாளிகள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.
இந்நிலையில், இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை ஆட்சியா் வே.சரவணன் உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான நகலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.