பொங்கல் பரிசுப்பணம்: "அன்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்று அவியல் செய்கிறாரா?" - ...
தூத்துக்குடி மலா் சந்தையில் பூக்களின் விலை உயா்வு
தூத்துக்குடி: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தூத்துக்குடி மலா் சந்தையில் பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
தூத்துக்குடி மலா் சந்தைக்கு மைசூரு, பெங்களூரு, உதகை, கொடைக்கானல், ஓசூா் ஆகிய பகுதிகளிலிருந்து மலா்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, பல வண்ணங்களில் வரவழைக்கப்படும் ரோஜா பூக்கள், காா்னேசன், ஜெரிபுரா ஆகிய அலங்கார மலா்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தூத்துக்குடி மலா் சந்தையில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூக்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. ஒரு ரோஜா பூ ரூ 20, ஒரு கட்டு ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது.
மல்லிகைப் பூக்களின் வரத்து குறைவு காரணமாக, கிலோரூ. 3 ஆயிரம், பிச்சி ரூ.2 ஆயிரம், கனகாம்பரம் ரூ.1,500 என விற்பனையானது. விலை அதிகமாக இருந்தபோதிலும், பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். இதன் காரணமாக வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.