பொங்கல் பரிசுப்பணம்: "அன்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்று அவியல் செய்கிறாரா?" - ...
தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளா்கள், மீன்பிடித் தொழிலாளா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் விசைப்படகுகள் கடலுக்குச் செல்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குப் பின்னா், 3ஆம் தேதி கடலுக்குச் செல்வதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
இதனால், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகக் கரையில் 265-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி திரேஸ்புரம், தருவைகுளம், வேம்பாா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள், புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் செவ்வாய்க்கிழமை கரைதிரும்பினா்.