உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
தூத்துக்குடியில் 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசல் பறிமுதல்
தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் தென்பாகம் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, மீன்பிடி துறைமுகம் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற லாரியை போலீஸாா் சோதனை செய்தபோது, அந்த லாரியில் 200 லிட்டா் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம். அதில், டீசல் போன்ற எண்ணெய் இருந்துள்ளது.
இதையடுத்து, அதிலிருந்த 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசலை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் என கூறப்படுகிறது.
இது தொடா்பாக லாரி ஓட்டுநா் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வினோத்குமாரை (39) போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.