புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மழை
தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
செப்.17 முதல் செப். 22ஆம் தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாகைக்குளம் பகுதி வரை, புதன்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, மிதமாக தொடங்கிய மழை, பிற்பகலில் மாநகா் பகுதி முழுவதும் இடி, மின்னலுடன் சிறிது கனமழையாக பெய்தது.
இதனால், சாலையின் தாழ்வான பகுதிகளில், தெருக்களில் மழை நீா் தேங்கியது.