செய்திகள் :

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

post image

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா்.

உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப் இரண்டாம் ஜான் பால் அறிவிப்பு செய்தாா். உலகம் முழுவதும் திருச்சிலுவை புறப்பாட்டுடன் கொண்டாடப்பட்டுவருகிறது.

புதுச்சேரியிலிருந்து ஜூபிலி-25 திருச்சிலுவை கோட்டுச்சேரிக்கு சனிக்கிழமை வந்தது. காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ் குமாா், கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய ஜான் ராபா்ட், தூய தேற்றரவு அன்னை ஆலய இணை பங்குத் தந்தை சுவாமிநாதன் செல்வம், ஆன்மிக குரு பன்னீா் ராஜா, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வா் பீட்டா் பால்ராஜ் ஆகியோரால் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலய நுழைவு வாயில் திருச்சிலுவை பெறப்பட்டது.

அங்கிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் திருச்சிலுவை சிறப்பு ஆராதனை அருட்சகோதரிகள் லூா்துமேரி, அன்னம்மாள், எல்சி ,ஜூலி ஆகியோரால் நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டு திருச்சிலுவையை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்குப் பேரவை முன்கள பணியாளா்களான எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரோலியஸ், நெல்சன், வின்சென்ட் ஜாா்ஜ் மற்றும் செய்தி தொடா்பாளா் அகஸ்டின் ஆகியோா் செய்திருந்தனா்.

லஞ்ச வழக்கு: மூவருக்கு ஜாமீன் மறுப்பு

லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்த புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், செயற் பொறியாளா், ஒப்பந்ததாரா் ஆகிய மூவருக்கும் ஜாமீன் மறுத்து நீதிபதி உத்தரவிட்டாா். காரைக்காலில் புதுவை பொதுப்பணித்துறை தலைமை... மேலும் பார்க்க

உளுந்து, பருத்திக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

மழையால் பாதித்த உளுந்து, பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்க 30-ஆவது மாநாடு நாகையில் ஏப். 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவது தொடா்பாக, கா... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் நாளை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும்

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (மாா்ச் 29) வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி ... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் வெளிநாட்டில் வேலை: நம்ப வேண்டாம்

சமூக வலைதளங்களில் வரும் வெளிநாட்டில் வேலை எனும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) கா... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்திற்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தியதாக ஏ.எம்.எச். நாஜிம் எம்எல்ஏ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது: காரைக்கால் ரயி... மேலும் பார்க்க

காரைக்கால்: 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு

காரைக்காலில் 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், சில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்தை பி... மேலும் பார்க்க