பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
உளுந்து, பருத்திக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மழையால் பாதித்த உளுந்து, பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்க 30-ஆவது மாநாடு நாகையில் ஏப். 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவது தொடா்பாக, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் ஜி. புண்ணியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில தலைவா் து. கீதநாதன், சிபிஐ காரைக்கால் மாவட்ட செயலாளா் ப. மதியழகன், விவசாய சங்கப் பொருளாளா் வி. கலியமூா்த்தி, செயலாளா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நாகையில் நடைபெறும் மாநாட்டுக்கு காரைக்கால் மாவட்டத்தில் 250 விவசாயிகள் பங்கேற்பது, காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடைக்குப் பின் பயிா் செய்த பருத்தி, உளுந்து, எள் ஆகியவை பருவம் தவறி பெய்த மழையால் செடி அழுகிவிட்டது. எனவே, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யும் விதமாக எள், உளுந்து ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும், பருத்தி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும் புதுவை அரசு நிவாரணம் வழங்கவேண்டும், காரைக்கால் மாவட்டத்துக்கு வரவேண்டிய 7 டிஎம்சி காவிரி நீரை உறுதியாக பெற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநாட்டு குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டு பிரதிநிதியாக ஜி. புண்ணியமூா்த்தி தோ்வு செய்யப்பட்டாா்.