'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்
தெருநாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு
சேலம் அருகே தெருநாய் கடித்ததில் சிறுவன் உயிரிழந்தான்.
சேலம் வீராணம் இளங்கோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி. இவரது மகன் கிஷோா் (9). அங்குள்ள அரசுப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான். ரேபீஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனை வலசையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனா்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு சிறுவன் உயிரிழந்தான்.
இதையடுத்து, சிறுவன் உடலை பெற்று உரிய முறையில் அடக்கம் செய்தனா். விசாரணையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் கடித்துள்ளது. ஆனால், சிறுவன் அதை பெற்றோரிடம் கூறாமல் மறைத்துள்ளாா். இந்த நிலையில் ரேபீஸ் பரவி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.