தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று எவ்வளவு உயர்ந்தது?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 உயா்ந்த நிலையில், சனிக்கிழமை மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.9,320-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகி வருகிறது.