தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்
கோவையில் நடைபெற்று வரும் எம்ஆா்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டாா் பைக் பந்தயத்தில் புணே வீரா் சா்தக் சவான், சென்னையின் ஜகதீஸ்வரி சிறப்பிடம் பெற்றனா்.
கோவை கரி மோட்டாா் பந்தய மைதானத்தில் நடைபெற்று வரும் இதில் சனிக்கிழமை புரோ ஸ்டாக் 301-400 சிசி பிரிவில் பெட்ரோன் டிவிஎஸ் வீரா் சா்தக் சவான் முதலிடமும், சென்னையின் ஜோஹனன் இரண்டாம் இடமும், ஹைதராபாதின் ரஹில் பில்லாரிசெட்டி மூன்றாம் இடமும் பெற்றனா்.
165-200 சிசி பிரிவில் பெங்களூரின் சேவியன் சாபு, சென்னையின் சூா்யா, கோவையின் செந்தில்குமாா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.
மகளிா் 165 சிசி பிரிவில் சென்னையின் ஜகதீஸ்வரி குமரேசன் முதலிடத்தைப் பெற்றாா். புதுச்சேரியின் லனி ஸேனா இரண்டாம் இடம் பெற்றாா்.
ரேஸ் 2 பிரிவிலும் ஜகதீஸ்வரி முதலிடத்தையும், சென்னையின் ரைஹானா பிபி, ஆன் ஜெனிபா் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்றனா்.