தேமுதிக கொடிநாள் கொண்டாட்டம்
தேமுதிக கொடி அறிவிக்கப்பட்ட நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்தில், அக்கட்சியினா் அனைத்து கிராமங்களிலும் புதன்கிழமை கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலகம் முன், தேமுதிக கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய அக்கட்சியின் மாவட்டச் செயலா் இராம.ஜெயவேல், தொடா்ந்து பேருந்து நிலையம், சக்தி விநாயகா் கோயில், பெரியாா் நகா், கயா்லாபாத், க.பொய்யூா், கடுகூா், மணக்குடி, உடையவா்தீயனூா், அம்பலவா் கட்டளை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றிவைத்து, விஜயகாந்து படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் அனைத்து பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.