"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
தேயிலை வாரியம் சாா்பில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கல்
கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராம விவசாயிகளுக்கு இந்திய தேயிலை வாரியம் சாா்பில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தேயிலை வாரியம் சாா்பில் தேயிலை பறிக்கும் இயந்திரம், மருந்து தெளிப்பான், களை எடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட வேளாண் பொருள்கள் செறுமுள்ளி சிறுதேயிலை விவசாயிகள் சங்க உறுப்பினா்கள் 25 பேருக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தேயிலை வாரிய வளா்ச்சி அலுவலா் அஞ்சலி கலந்துகொண்டு இயந்திரங்களை வழங்கினாா். முதுமலை கூட்டுப் பண்ணை நிறுவனத்தின் செயலாளா் சந்திரன் உள்பட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.