முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
தேவஸ்தான உதவி நிா்வாக அதிகாரி பணியிடை நீக்கம்
திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி நிா்வாக அதிகாரி ஏ. ராஜசேகா் பாபு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பதி மாவட்டத்தில் உள்ள புத்தூரில் ராஜசேகா் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உள்ளூா் தேவாலய பிராா்த்தனைகளில் கலந்து கொள்கிறாா் என புகாா் எழுந்தது.
தேவஸ்தானத்தின் நடத்தை விதிகளைப் பின்பற்றவில்லை என்றும், மத அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியராக பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், தேவஸ்தான விஜிலென்ஸ் துறை சமா்ப்பித்த அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு, விதிகளின்படி அவா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.