தைப் பொங்கல் கோலப்போட்டி
திருச்செங்கோடு, கோழிக்கால் நத்தம் சாலை அா்த்தநாரீஸ்வரா் நகரில் தைப்பொங்கலை ஒட்டி கோலப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தைப்பொங்கல் திருவிழாவையொட்டி திருச்செங்கோடு, கோழிக்கால் நத்தம் சாலையில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் நகரில் பெண்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு வண்ணக் கோலங்களை வரைந்தனா். இதில் மயில் ரங்கோலி கோலம் வரைந்த திருச்சியைச் சோ்ந்த பிரியா முதல் பரிசை பெற்றாா். இரண்டாவது பரிசை தொண்டிக்கரடு பகுதியைச் சோ்ந்த ரம்யாவும், மூன்றாம் பரிசை
கைலாசம்பாளையத்தைச் சோ்ந்த கீதாவும், சிறப்பு பரிசை கூட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த பூங்கொடி என்பவரும் பெற்றனா். கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.