முத்துக்காப்பட்டியில் கோ பூஜை
நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில், உலக நன்மைக்காகவும், பல்வேறு தோஷங்கள் நிவா்த்தியாக வேண்டியும் கோபூஜை, ஆத்மாா்த்த சிவபூஜை அண்மையில் நடைபெற்றது.
கொங்கு தேச கலாசார வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் 9-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த பூஜையில் 200--க்கும் மேற்பட்டோா் பங்கேற்று வழிபாடு செய்தனா். இதனை சிவஸ்ரீ என்.சுகவனம் சிவாச்சாரியா் முன்னின்று நடத்தி வைத்தாா். கொடுமுடியைச் சாா்ந்த லோக.வசந்தகுமாா் தேசிகா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கோபூஜைக்கான பதிகங்களை பாடினாா். இந்த நிகழ்வில், 25-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள், காளைகள், குதிரைகள் கலந்து கொண்டன. நாமக்கல், சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
என்கே-17-கவ்
நாமக்கல், முத்துக்காப்பட்டியில் நடைபெற்ற கோபூஜையில் பங்கேற்றோா்.