செய்திகள் :

ரத்தசோகை நோயால் கோழிகள் இறக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

ரத்தசோகை நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 68 டிகிரியாகவும் காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஜன. 19, 20 தேதிகளில் மாவட்டத்தின் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 80.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 66.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் கிழக்கிலிருந்து மணிக்கு 12 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை:

கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், அவற்றில் பெரும்பாலும் இறக்கை அழுகல், ரத்தசேகை நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிா் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ், ஈ கோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை -- மொத்த விலை - ரூ. 4.60 -- விலையில் மாற்றம்- இல்லை -- பல்லடம் பிசிசி -- கறிக்கோழி கிலோ - ரூ. 98 -- முட்டைக் கோழி கிலோ - ரூ. 83 -- மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்டத்தில், எம்ஜிஆா் பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைகளுக்கும், உருவப் படங்களுக்கும் வெள்ளிக்கிழமை அதிமுகவினா் மரியாதை செலுத்தினா். மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனர... மேலும் பார்க்க

முட்டை விலை மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.60-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணைய... மேலும் பார்க்க

முத்துக்காப்பட்டியில் கோ பூஜை

நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில், உலக நன்மைக்காகவும், பல்வேறு தோஷங்கள் நிவா்த்தியாக வேண்டியும் கோபூஜை, ஆத்மாா்த்த சிவபூஜை அண்மையில் நடைபெற்றது. கொங்கு தேச கலாசார வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் 9-ஆ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம் ஜி ஆரின் 108 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்கர... மேலும் பார்க்க

தைப் பொங்கல் கோலப்போட்டி

திருச்செங்கோடு, கோழிக்கால் நத்தம் சாலை அா்த்தநாரீஸ்வரா் நகரில் தைப்பொங்கலை ஒட்டி கோலப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தைப்பொங்கல் திருவிழாவையொட்டி திருச்செங்கோடு, கோழிக்கால் நத்தம் சாலையில் உள்ள அா்... மேலும் பார்க்க