ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
தொடர்ந்து 14-வது ஆண்டாகக் குறையும் ஜப்பானின் மக்கள் தொகை!
ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையானது தொடர்ந்து 14வது ஆண்டாகக் குறைந்துள்ளது.
ஜப்பானின் மக்கள் தொகையானது கடந்த 2024-ம் ஆண்டின் அக்டோபர் மாத கணக்குப்படி 12 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டிலிருந்து 8,98,000 அளவுக்கு குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அந்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், குழந்தைப் பிறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தும் வருகின்றது.
இந்நிலையில், ஜப்பானில் வாழும் வெளிநாட்டினர் உள்ளிட்ட மொத்த மக்கள் தொகையானது 5,50,000 எண்ணிக்கைகள் சரிந்து 12.3 கோடியாகக் குறைந்துள்ளது. இது தொடர்ந்து 14வது ஆண்டாக சரிவைக் குறிப்பதாக ஜப்பானின் உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் மக்கள் தொகையில், தற்போது அந்நாட்டில் வாழும் 14 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,43,000 சரிந்து 1.3 கோடியாகக் குறைந்துள்ளதாகவும்; அதேவேளையில், அந்நாட்டில் வாழும் மக்களில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது 3.6 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையானது (15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள்) 7.3 கோடியாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஜப்பானில் தனி நபரது ஆயுள்காலமானது கடந்த 2000-ம் ஆண்டில் 81.5 (81.5 - 81.6) ஆகக் கணக்கிடப்பட்டிருந்த நிலையில் அது 2021-ல் 84.5 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:மாலத்தீவில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை!