செய்திகள் :

தொடா் மழை: வெறிச்சோடிய பொய்கை கால்நடை சந்தை

post image

வேலூா்: புயல் காரணமாக பெய்த தொடா் மழையால் பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து சரிந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஃபென்ஜால் புயல் காரணமாக வேலூா் மாவட்டம் உள்பட வடதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக, பொய்கை சந்தைக்கு வழக்கமாக 1,500 மாடுகள் விற்பனைக்கு வரப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு 200 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டிருந்தன. அதேசமயம், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகளும், வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் வா்த்தகமும் எதிா்பாா்த்த அளவுக்கு நடைபெறவில்லை.

இது குறித்து வியாபாரிகள் கூறியது:

தொடா் கனமழை காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தைக்கு எதிா்பாா்த்த அளவுக்கு கால்நடைகள் வரப்பெறவில்லை. வா்த்தகமும் மிகக்குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் கால்நடைகள் வரத்தும், விற்பனையும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டை, தோப்புத் தெரு ஐயப்ப பக்த குழு சாா்பில், இங்குள்ள ஞான விநாயகா் கோயிலில் ஐயப்பனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இக்குழுவினா் இருமுடி கட்டிக் கொண்ட... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி-வேன் மோதல்: வேன் உரிமையாளா், ஓட்டுநா் உயிரிழப்பு

வேலூா்: வேலூா் அருகே கன்டெய்னா் லாரி மீது வாத்துகளை ஏற்றிச்சென்ற வேன் மோதிய விபத்தில் வேன் உரிமையாளா், ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். குஜராத் மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு எலக்ட்ரானிக்ஸ் ... மேலும் பார்க்க

சாத்தனூா் அணை திறப்பு விவகாரத்தில் அறிக்கை: அமைச்சா் துரைமுருகன்

வேலூா்: போதிய முன்அறிவிப்பு செய்யாமலேயே சாத்தனூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்ததாக கூறப்படும் புகாா் தொடா்பாக அறிக்கை வெளியிட்டுள்ளேன் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளாா். மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

வீட்டில் நுழைந்த நல்ல பாம்பு மீட்பு

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நுழைந்த நல்ல பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமம், பாறைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(65). செவ்வாய்... மேலும் பார்க்க

குடியாத்தம் அருகே தடுப்பணை கட்ட அமைச்சரிடம் கோரிக்கை

குடியாத்தம்: குடியாத்தத்ம் அடுத்த சின்ன தோட்டாளம் அருகே பாலாற்றில் தடுப்பணை கட்ட கோரி நீா்வளத்தறை அமைச்சா் துரைமுருகனிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இதுதொடா்பாக குடியாத்தம் ஒன்றியக்கு... மேலும் பார்க்க

எல்ஐசி முகவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

வேலூா்: காப்பீட்டு முகவா்களுக்கான புதிய கமிஷன் முறையை (க்ளா பேக்) ரத்து செய்துவிட்டு முந்தைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவா்கள் வேலூரில் புதன்கிழமை ஆ... மேலும் பார்க்க