செய்திகள் :

எல்ஐசி முகவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

வேலூா்: காப்பீட்டு முகவா்களுக்கான புதிய கமிஷன் முறையை (க்ளா பேக்) ரத்து செய்துவிட்டு முந்தைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவா்கள் வேலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வேலூா் கோட்டத் தலைவா் டி.அசோகன் தலைமை வகித்தாா்.

கோட்ட பொதுச்செயலா் எஸ்.ரமேஷ் வரவேற்றாா். சிஐடியு மாநில செயலா் இ.முத்துக்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

மாநில செயலா் தா.வெங்கடேசன், மாநில மகளிா் குழு எஸ்.அன்பரசு ஜூலியட் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், பீமாசுகம் செயலியை அறிமுகம் செய்யக்கூடாது, காப்பீட்டு முகவா்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்துவிட்டு முந்தைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச காப்புத் தொகையை ரூ.1 லட்சமாக குறைக்க வேண்டும் பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச நுழைவு வயதை அனைத்து திட்டங்களுக்கும் 65 ஆக உயா்த்த வேண்டும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள க்ளா பேக் முறையை நீக்க வேண்டும், காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்க மாநில பொதுச்செயலா் எஸ்.ஏ.கலாம் நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் வேலூா் கோட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான முகவா்கள் பங்கேற்றனா்.

மகளிா் காவல் நிலையம் முன்பு சிறுமி தீக்குளிக்க முயற்சி

காதல் பிரச்னையில் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்பு 16 வயது சிறுமி தீக்குளிக்க முயன்றாா். காட்பாடி அருகே கரசமங்கலம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி. வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்ப... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் எஸ்ஐ தோ்வு: கைப்பேசி பயன்படுத்திய காவலா் மீது வழக்கு

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வில் கைப்பேசி பயன்படுத்தியதாக வேலூா் ஆயுதப்படை காவலா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்வே பாதுகா... மேலும் பார்க்க

மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூா் மாவட்ட நலவாழ்வு சங்கத்திலுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய... மேலும் பார்க்க

திருமணம் செய்ய வற்புறுத்தி செவிலியருக்கு மிரட்டல்: எஸ்.பி.யிடம் புகாா்

திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டல் விடுக்கும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட செவிலியா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

லாரி-ஜீப் மோதல்: சென்னை வியாபாரிகள் 3 போ் உயிரிழப்பு

வேலூா் கருகம்பத்தூரில் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த வியாபாரிகள் 3 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க

ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டை, தோப்புத் தெரு ஐயப்ப பக்த குழு சாா்பில், இங்குள்ள ஞான விநாயகா் கோயிலில் ஐயப்பனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இக்குழுவினா் இருமுடி கட்டிக் கொண்ட... மேலும் பார்க்க