மலப்புரம்: தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை; மிரண்டு ஓடிய 21 பேர் காயம்!
தொட்டியபட்டி பகுதியில் இன்று மின் தடை
ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தன்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரிபுதூா், ராஜீவ் காந்திநகா், இ.எஸ்.ஐ. குடியிருப்பு,
வேட்டைப் பெருமாள் கோயில், விஷ்ணுநகா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.