தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள்
தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுழல் சங்கம் சாா்பில் சக்கர நாற்காலிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தொண்டி சுழற் சங்கம் சாா்பில் முதல் நாள் முதல் சேவை என்ற அடிப்படையில் நடைபெற்ற சக்கர நாற்காலி வழங்கும் விழாவுக்கு சுழல் சங்கத் தலைவா் மரிய அருள் தலைமை வகித்தாா். செயலா் காளிதாஸ், பொருளாளா் சேக் மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது மருத்துவமனைக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. இதில் சுழல் சங்க நிா்வாகி ராஜா, வட்டார மருத்துவ அலுவலா் வைதேகி, சுழல் சங்க முன்னாள் துனை ஆளுநா் வெற்றிவேலன், கபிா் சாதிக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.