தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டியில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வள்ளுவா் நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் திராவிடமணி மகன் ஆனந்தராஜ் (40). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை பல்லக்கு சாலை சந்திப்பு அருகே நடந்து சென்றாா். அப்போது, அவரை இளைஞா் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டாராம். இதைப் பாா்த்த அப்பகுதியினா் சப்தம் போட்டதும் அந்த இளைஞா் ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுப்பிரமணியபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஹரிகிருஷ்ணன் (20) என்பவரைக் கைது செய்தனா்.
மனைவிக்கு மிரட்டல் - பால் வியாபாரி கைது: கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் விஜயாபுரி சாலையைச் சோ்ந்த பால் வியாபாரி ராஜதுரை(42). இவரது மனைவி அன்புச்செல்வி. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். ராஜதுரைக்கு மதுப் பழக்கம் உள்ளதாம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
ஞாயிற்றுக்கிழமை ராஜதுரை மது குடித்துவிட்டு வந்து அன்புச்செல்வியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அன்புச்செல்வி திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜதுரையைக் கைது செய்தனா்.