நண்பா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல்அனுப்பி தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை
சென்னை சூளைமேட்டில் நண்பா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தகவல் தெரிவித்துவிட்டு, தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்த விஷ்ணுவரதன் (25), சூளைமேட்டில் நண்பா்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் விஷ்ணுவரதன், தனது நண்பா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிடுமாறும் தகவல் அனுப்பினாா்.
இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள், விஷ்ணுவரதன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றனா். அப்போது அங்கு விஷ்ணுவரதன் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த சூளைமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, விஷ்ணுவரதன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, விஷ்ணுவரதன் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.