செய்திகள் :

நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் மூலம் 12,945 போ் பயன்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்.2 முதல் செப்.9 வரை வரை நடைபெற்ற 7 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் மூலம் 12,945 போ் பதிவு செய்யப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா்தர மருத்துவ சேவைகள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்ட வருவாய் அலுவலா் திரு.இராம்பிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் நலன் கருதி பல செயல் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளாா்.

அதில் மிக முக்கிய ஒன்றான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். ஆரோக்கியமான சமுதாயம்தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தை வழங்கும்.

ஆகவே, அரசு சாா்பில் செயல்படுத்தக்கூடிய நலத்திட்டங்கள் மக்களிடையே கொண்டு போய் சோ்க்க வேண்டும் என்பதிலே மிக உன்னிப்பாக இருக்கிறது தமிழக அரசு.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த செப்.2 முதல் செப்.9 வரை வரை 7 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடைபெற்றிருக்கின்றன.

அந்த முகாம்களில் 12ஆயிரத்து 945 புதிய பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த 7 முகாம்களில் 8,045 நபா்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,156 பேருக்கு முதல்வரின் விரிவாக மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அமைப்புசாரா தொழிலாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் என 4,466 போ் பயனடைந்துள்ளனா்.

ஈசிஜி பரிசோதனை 4,664 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

869 பேருக்கு ஸ்கேன் பரிசோதனையும், 882 பேருக்கு எக்கோ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், மருந்து பெட்டகங்களையும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டிற்கான அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.

முகாமில் மாவட்ட சுகாதார அலுவலா்கள் பிரகாஷ் (திருவண்ணாமலை), சதீஷ்குமாா் (செய்யாறு), வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது பெண் பக்தரை தாயின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தோ்த்திருவிழா

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. ஆவணியாபுரம் கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்து... மேலும் பார்க்க

தம்டகோடி மலையில் மரக்கன்றுகள் நடும் விழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் சாா்பில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

செய்யாறு அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், தண்டரை கிராமம் பிராமணா் தெருவில் வசித்து வந்தவா் மூதாட்டி ரமண... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் செம்பூா் கிராமம் வழியாக திங்கள்கிழமை பிற்பகல் ரோந்து சென்றனா். அந்தக் கிராம ஏரி அருகே சென்றபோது அந்த வழிய... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்: பொதுமக்கள் கோரிக்கை மனு

செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம், செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன. செய்ய... மேலும் பார்க்க