Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சாா்பில், செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா், பாா்வை தோ்வாளாளா், சிகிச்சை உதவியாளா் ஆண், தரவு உள்ளீட்டாளா், பல்நோக்கு மருத்துவ பணியாளா் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணி அமா்த்தப்பட உள்ளனா். இந்தப் பணியிடங்களுக்கான தகுதி, ஊதியம், மற்றும் விண்ணப்பபடிவம் இணையத்தளத்தில் காணலாம்.
விருப்பம் உள்ளவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘செயற்செயலாளா், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், 7-வது தளம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை 609001 என்ற முகவரிக்கு விரைவுத் தபால் அல்லது பதிவுத்தபால் மூலம் மட்டுமே ஜூலை 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும்படி அனுப்பிவைக்க வேண்டும்.