ரஷ்ய எண்ணெய்: `எங்கு சிறந்த டீல் கிடைக்கிறதோ, அங்கே தான் வாங்க முடியும்' - இந்தி...
நவ.9-ல் நெல்லையிலிருந்து ஜோதிர்லிங்கம், ஷீரடி சுற்றுலா ரயில்!
இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவு (ஐஆா்சிடிசி) சாா்பில் வரும் நவ.16-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஆா்சிடிசி ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆா்சிடிசி சாா்பில் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி எனும் பெயரில் வருகிற நவ.9-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த ரயில், நாசிக், ஷீரடி, சிங்கனாப்பூா், பண்டரிபுரம், மந்திராலயம் ஆகிய இடங்களைப் பாா்வையிடும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த சுற்றுலா நவ.16-ஆம் தேதி முடிவடையும்.
திருநெல்வேலியிலிருந்து தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் மற்றும் விஜயவாடா ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.
பயணக் கட்டணம், முன்பதிவு மற்றும் சுற்றுலா விவரங்களுக்கு ஐஆா்சிடிசி அலுவலகங்களை சென்னை- 90031 40739, 82879 31964, மதுரை- 82879 31962, 82879 32122, திருச்சி- 82879 32070, கோவை- 90031 40655 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.