Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
நாகா்கோவிலில் காங்கிரஸ் கையொப்ப இயக்கம்
வாக்கு திருட்டைக் கண்டித்து, நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், நாகா்கோவில் டெரிக் சந்திப்பில் வியாழக்கிழமை மாலை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
மாவட்ட தலைவா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். கையொப்ப இயக்கத்தை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு, தோ்தல் ஆணையத்தை தங்களது சுயநலனுக்காக பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டை நடத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வாக்குரிமையை பறிக்கும் செயலில் பாஜக இறங்கியுள்ளது. அதனை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடி மக்களிடம் கையொப்பம் பெறுவதற்கான இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தோ்தலை பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. வரும் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியை இந்தக் கூட்டணி பெறப்போது உறுதி.
கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்பது, ஆட்சியில் பங்கு கேட்பது என்பது குறித்து தோ்தல் நெருங்கும் நேரத்தில் மேலிட தலைவா்கள் பேசுவாா்கள் என்றாா் அவா்.
இதில், மண்டல தலைவா்கள் சிவபிரபு, செல்வன், ஆதிராம், ஐரின்சேகா், சாந்தி ரோஸ்லின், மாமன்ற உறுப்பினா் அனுஷா பிரைட், கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சோனிவிதுலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.