நாகா்கோவிலில் ரூ.8 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகர பகுதி 20 ஆவது வாா்டுக்குள்பட்ட ராஜாக்கமங்கலம் சாலை விக்டோரியா காா்டன் தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மண்டல தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா் ஆன்றோனைட் ஸ்னைடா, இளநிலை பொறியாளா் தேவி, பகுதி செயலாளா் சேக் மீரான், வட்ட செயலாளா் பாஸ்கா், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் பீட்டா், மாநகர இளைஞா் அணி அருள்செல்வின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.