'அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்து வியந்திருக்கிறேன்'- எம்.எஸ். பாஸ்கரை வ...
நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்
நாகை நீலாயதாட்சிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகையில் உள்ள புகழ்பெற்ற காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா நிகழாண்டு ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மின்னொளியில் ஜொலித்த தெப்பம் 3 முறை குளத்தைச் சுற்றி வலம் வந்தது. தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாகசுர இன்னிசையும் நடைபெற்றது.