செய்திகள் :

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

post image

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை என்று தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பே மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்த கூட்டம். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்.

மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்க நேரிடும்.

மாநிலங்களில் தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். தமிழ்நாடு 8 முதல் 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரம் பற்றியது.

இந்த தொகுதி மறுசீரமைப்பு சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக நம்மை மாற்றிவிடும். கூட்டாட்சித் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளதை உணர்ந்து அனைவரும் கூடியுள்ளோம்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை. எந்த சூழ்நிலையிலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது" என்று பேசினார்.

இந்த கூட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொகுத்து வழங்குகிறார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை '0' என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கனிமொழி தன்னுடைய ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அண்ணாமலை

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணா... மேலும் பார்க்க

மதுரையில் காவலர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!

மதுரையில் காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார். கைதான ஆட்டோ ஓட்டுநர், பணத்துக்காக காவலரை எரித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடந்த 19 ம... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் நியமனம்: அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பு!

சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்கள் நியமனம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யூடியுபர் சவுக்கு சங்கர் வீட்டில் துய்மைப் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். யூடியுபர் சவுக்க... மேலும் பார்க்க