TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Exp...
நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆசிரியா் தின விழா
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாகக் கொண்டாப்படுகிறது. அந்தவகையில் வெள்ளிக்கிழமை மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் ஆசிரியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியை சுமதி தலைமை வகித்தாா். ஆசிரியைகள் அனைவரும் ஒரே வடிவிலான புடவைகள் அணிந்து வந்திருந்தனா். அனைத்து ஆசிரியா்களுக்கும் மாணவிா்கள் மலா்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனா்.
தொடா்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும், கலைத் திருவிழாவில் வென்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
என்கே-4-டீச்சா்ஸ்
ஆசிரியா் தின விழாவையொட்டி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய ஆசிரியைகள்.