முள்ளுக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ராசிபுரம், முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.
ராசிபுரம் கமலா மண்டபம், முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாம்களை ஆய்வு செய்து அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்களின் நீண்ட கால அரசு துறை சாா்ந்த கோரிக்கைகள் உடனுக்குடன் தீா்க்கப்படுகிறது. வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மகளிா் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து வசதி, மகளிா் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.
முகாமில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், வட்டாட்சியா் எஸ்.சசிக்குமாா், நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
படம் உள்ளது - 4ஸ்டாலின்
முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன்.