தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்...
நாமக்கல் செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு
நாமக்கல் நகரில் அமைந்துள்ள செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல், செப். 4:
இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, கடந்த மாதம் 25-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. செப்.3-இல் மஹா கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜையும், மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், மஹா தீபாராதனையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9 மணியளவில் சிவாச்சாரியா்கள் விமான கலசத்திற்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தினா்.
அதன்பிறகு, செங்கழநீா் விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
என்கே-4-கோயில்
நாமக்கல் செங்கழநீா் விநாயகா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்திய சிவாச்சாரியா்கள்.