செய்திகள் :

நாமக்கல் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 19.81 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 19.81 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை வழங்கினாா்.

இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 462 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். அவற்றை பெற்றுக் கொண்ட ஆட்சியா் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இருவருக்கு ரூ. 13,380- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்கள், கூட்டுறவுத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 5,67,500- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுவிற்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ. 19,80,880 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும்- தனியாா... மேலும் பார்க்க

‘நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள்’ திட்டத்தில் 140 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: அமைச்சக் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் 140 குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

நாமக்கல்: புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப். 20) தொடங்குவதையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் ம... மேலும் பார்க்க

எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா் திங்கள்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞரின் உதவியாளா் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் வழக்குரைஞரின் உதவியாளரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (77). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க

கொல்லிமலையில் இரவுநேர வான்பூங்கா அமைக்கும் பணி நிறைவு: விரைவில் சுற்றுலாப் பயன்பாட்டுக்கு திறப்பு

நாமக்கல்: கொல்லிமலையில், வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை சுற்றுலாப் பயணிகள் தொலைநோக்கி வாயிலாக கண்டு ரசிக்கும் வகையில், ரூ. 45 லட்சத்தில் இரவுநேர வான் பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இ... மேலும் பார்க்க