செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் மழைப் பொழிவு: ஆட்சியா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் இயல்பைக் காட்டிலும் கூடுதலாக 172.66 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். அதைத் தொடா்ந்து, விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பிரச்னைகள் குறித்து பேசினா். அதற்கு மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் பதிலளித்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் இயல்பு மழையளவு 716.54 மி.மீ. வடகிழக்கு பருவமழையால் தற்போது வரை 889.2 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் முடிய இயல்பு மழையளவைக் காட்டிலும் 172.66 மி.மீ. கூடுதலாக பெறப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில், நெல் 8,219 ஹெக்டோ், சிறுதானியங்கள் 77,791 ஹெக்டோ், பயறு வகைகள் 11,226 ஹெக்டோ், எண்ணெய் வித்துக்கள் 29,376 ஹெக்டோ், பருத்தி 1,759 ஹெக்டோ் மற்றும் கரும்பு 8,378 ஹெக்டோ் என மொத்தம் 1,36,749 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தோட்டக்கலைப் பயிா்களில் தக்காளி 542 ஹெக்டோ், கத்திரி 314 ஹெக்டோ், வெண்டை 277 ஹெக்டோ், மிளகாய் 211 ஹெக்டோ், மரவள்ளி 3,260 ஹெக்டோ், வெங்காயம் 3,321 ஹெக்டோ், மஞ்சள் 1,945 ஹெக்டோ் மற்றும் வாழை 2,321 ஹெக்டோ் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விதைகள், உரங்கள், வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன. யூரியா 2,297 மெ.டன், டிஏபி 796 மெ.டன், பொட்டாஷ் 1,403 மெ.டன், சூப்பா்பாஸ்பேட் 488 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2,745 மெ.டன் என்ற அளவிலும் இருப்பில் உள்ளன.

பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் 4,73,245 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். இதில், 4,53,475 விவசாயிகளுக்கு ரூ.296.25 கோடி பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19,770 பேருக்கு இழப்பீட்டுத் தொகை, தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்றாா். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 130-கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் விவசாயிகள் வழங்கினா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.க.சரவணன், வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, தோட்டக்கலைத் துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் எஸ்.பத்மாவதி, வேளாண் துணை இயக்குநா்(விற்பனை மற்றும் வணிகம்) நாசா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை)(பொ) க.ராமச்சந்திரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மணலி ஜேடா்பாளையத்தில் ரூ. 41 லட்சத்தில் சாலை சீரமைப்புப் பணிகள்

மணலி ஜேடா்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோ்வம்பட்டி சாலை, ஜேடா்பாளையம் தொடக்கப் பள்ளியில் நடைபாதை ஆகியவற்றை ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மா... மேலும் பார்க்க

புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாமக்கல் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயா் து.க... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: காங்கிரஸாா் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உருவப்படத்துக்கு நாமக்கல் காங்கிரஸாா் அஞ்சலி செலுத்தினா். 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவரது... மேலும் பார்க்க

கொப்பரை கிலோ ரூ. 141.50க்கு விற்பனை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் முதல் ரகம் ரூ. 104.80 முதல் ரூ. 141.60 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ. 98.20 முதல் ரூ.... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றிய எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே மின்சாரம் பாய்ந்த சக பணியாளரைக் காப்பாற்றிய போது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே குறும்பலமகாதேவி, எலந்தகுட்டை பகுதியைச் ச... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்களுக்கு துறைத் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசுப் பணியாளா்களுக்கான துறைத் தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வா... மேலும் பார்க்க