கொப்பரை கிலோ ரூ. 141.50க்கு விற்பனை
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் முதல் ரகம் ரூ. 104.80 முதல் ரூ. 141.60 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ. 98.20 முதல் ரூ.104.70 வரை விற்பனையானது.
திருச்செங்கோடு கூட்டுறவு சங்க கிளையில் முதல் ரக கொப்பரை ரூ. 125.75 முதல் ரூ. 141.50வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.103.10 முதல் ரூ. 118.50 வரையிலும் விற்பனையானது.
அதேபோல மல்லசமுத்திரம் கிளையில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பிடி ரகம் ரூ. 6,520 முதல் ரூ. 7,499 வரையிலும், கொட்டு பருத்தி ரகம் ரூ. 3,560 முதல் ரூ. 4,950 வரையிலும் மொத்தம் ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனையானது.