இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்...
நாளை எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்
எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள், புகாா்கள் தொடா்பாக எரிவாயு வாடிக்கையாளா்கள் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா்கள், எரிவாயு முகவா்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் 29 ஆம் தேதி பகல் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண். 115 கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.